பொதுவாகவே குரங்கு எந்த வேலை செய்தாலும் அதை சின்னா பின்னமாக்கி விடும். அதனால் தான் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் என சொல்வார்கள். ஆனால் அந்த பழமொழியை எல்லாம் மாற்றியமைத்து குரங்கு ஒன்று அசத்தியுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள்.
அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சேட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். கையால் பழங்களை சாப்பிடும் போதும் அதில் அப்படியே மனிதர்களின் சாயல் இருக்கும். அதே நேரத்தில் குழந்தைகள் சேட்டை செய்யும் போது உனக்கு இன்னும் வால் மட்டும் தான் முளைக்கல என சொல்வதைக் கேட்டிருப்போம். மனிதனுக்கு ஆறு அறிவு. குரங்குக்கு ஐந்தறிவு என்பதைத் தாண்டி பெரும்பாலான விசயங்கள் ஒத்துப்போகும்.
ஆனால் இப்போது குரங்குக்கும் ஆறு அறிவு இருக்குமோ என சந்தேகப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. இளம் பெண் ஒருவர் தன் வீட்டுக்கு சமையல் செய்ய போகிறார் அப்போது அவருக்கு எதிரே குரங்கு ஒன்று வந்து அமர்கிறது. அந்தக் குரங்க, அந்த பெண் ஒரு பாத்திரத்தில் போடும் காய்கறிகளை நேக்காக இரு துண்டுகளாக கட் செய்கிறது.
நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டது போல் செம ஸ்பீடாக குரங்கு அந்த சமையலுக்கு உதவுகிறது. அந்த பெண் காய்கறியை எடுத்துப்போட குரங்கு கட் செய்துகொண்டே இருக்கிறது. இந்த வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது…