அடேங்கப்பா செம கெத்ததாக விமானம் ஓட்டும் பிரபல முன்னணி நடிகர் .. இதோ புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!
வினய் ராய் ஒரு இந்திய நடிகர், பொதுவாக தமிழ் படங்களில் தோன்றுவார். உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், எந்தென்றும் புன்னகை, அரண்மனை ஆகிய படங்களுக்காக மிகவும் பிரபலமானவர். துப்பறிவாளன் படத்தில் வில்லனாக மாறிய இவர், டாக்டர், எதிர்கொள்ளும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
விஷால் நாயகனாக நடித்த துப்பறிவாளன் படத்தில் வினய் நடித்த வில்லன் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த டாக்டர் படத்தில் வினய் வில்லனாகவே நடித்தார், அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்தில் செம வெயிட்டான வேடத்தில் நடித்திருந்தார்.வினய் ஒரு பேட்டியில் தான் முதலில் விஸ்கி கம்பெனியில் பணிபுரிந்ததாகவும் பின்னர் பேங்க் வேலை
செய்யும் போது சினிமா பக்கம் ஆர்வம் வந்து இந்த பக்கம் வந்ததாக கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் வினய் குட்டி விமானம் ஒன்று ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. தற்போது அவர் ஓட்டும் போது எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து அவருக்கு சூப்பர் வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.