அடேங்கப்பா திருமணத்திற்காக நயன்தாரா வாங்கிய நகைகள் மட்டும் இத்தனை கோடியா ..?? வெளியான தகவலை கேட்டு வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அடேங்கப்பா திருமணத்திற்காக நயன்தாரா வாங்கிய நகைகள் மட்டும் இத்தனை கோடியா ..?? வெளியான தகவலை கேட்டு வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சமீப காலத்தில் தென்னிந்தியாவில் எந்த ஒரு நடிகையின் திருமணமும் நயன்தாரா திருமணம் அளவு கவனம் பெறவில்லை. திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பவே பல கோடிகளை கொடுத்து நெட்பிளிக்ஸ் ரைட்ஸ் வாங்கி வைத்துள்ளது.திருமண நிகழ்வு நேற்று (ஜூன் 08) மற்றும் இன்று (ஜூன் 09) என இரு நாட்கள் நடைபெற்றது. இதில் மணப்பெண் முகத்தில் மஞ்சள் பூசி பெரியவர்கள் வாழ்த்து கூறுவர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழ் முறைப்படி திருமணம் இனிதாக நடந்து முடிந்தது.நெருங்கிய சொந்தம், திரைப்பிரபலங்கள் என சுமார் 200 பேர் மட்டுமே மணவிழாவில் பங்கேற்றனர். மாமல்லபுரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி கண்ணாடி வீடு செட் போட்டு அதில் மணப்பந்தல் அமைக்கப்பட்டது. நடிகர் ரஜினி தாலி எடுத்துக்கொடுக்க திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு டிசைனர் மோனிக் ஷா வடிவமைப்பில், முழுக்க கைவினைக் கலையால் உருவாக்கப்பட்ட செக்கச் சிகப்பில் புடவை, முழுக் கை பிளவுஸ் என அமர்க்களமாயிருந்தார் நயன்தாரா. கழுத்தில் மரகதம் பதித்த சோக்கரும், போல்கி மற்றும் பெரிய ரஷ்ய டெம்பிள் நெக்லசும் நயனுக்கு கிளாசியான லுக்கை தருகிறது. போல்கி நகைகளில் அன்கட் வைரங்களை பயன்படுத்துவர்.

மணமகன் விக்னேஷ் சிவன் தங்க நிற ஜரிகையுடன் கூடிய பட்டு குர்த்தா, வேட்டியில் கூடுதல் பளபளப்பாக காட்சித் தருகிறார். அவருடைய உடைகளும் கைவினையில் ஆனது. நயன்தாராவின் மரகத நகைகளுக்கு மேட்ச்சாக விக்னேஷ் சிவனின் குர்த்தா பட்டன்கள், கஃப் லிங்குகள் எல்லாமும் மரகதத்தால் அமைக்கப்பட்டவை.

இதோ வெளியான வீடீயோவை நீங்களே பாருங்க .. அதிர் ச்சி யாகிடுவீங்க ..