தமிழ் சினிமாவில் வெளியான தூத்துக்குடி என்ற திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக கார்த்திகா மற்றும் ஸ்வேதா நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘கருவாபையா’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
இந்த பாடலில் நடிகை கார்த்திகாவின் நடனமும் ஹிட் ஆனது. அதன் பிறகு இவர் பிறப்பு திரைபடத்தில் நடித்தார். அதில் ‘உலக அழகி’ நான் தான் என்ற பாடல் பெரிதளவில் பேசப்பட்டது. சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த இவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் ‘நாளைய பொழுது உன்னோடு’ ‘மதுரை சம்பவம்’ ராமன் தேடிய சீதை’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் படங்களில் நடித்தாலும் பிரபலமான நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. அதன் பின் இ றுதியாக இவர் பட்டாளம் என்ற திரைபடத்தில் 2012 ஆம்
ஆண்டு நடித்திருந்தார். அதன் பின் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் கமிட் ஆக உள்ளார். இவர் தமிழ் படங்களில் நடித்து கொண்டிருந்த பொழுது தங்கையின் படிப்பிற்காக மும்பை செல்லும் காரணத்தால் இவர் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார்.
மேலும் இவர் சென்னை வந்த போது இவரை பார்த்த மக்கள் மற்றும் உறவினர்கள் பலர் நீங்கள் ஏன் மீண்டும் நடிக்க கூடாது என கேட்டனர். அதற்காக கா த்தி ருந்த பொழுது தான் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
மீண்டும் அதன் மூலம் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதே சமயம் தமிழில் 2 திரைபடம் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. என கார்த்திகா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை அதிகரித்துள்ளனர்.