விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த 3 ஆம் தேதி துவங்கியது. இந்த சீசனில் ஆம் ஆண் போட்டியாளர்களும் 10 பெண் போட்டியாளர்களும் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை ஒருவர் கலந்து கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து பேசியது பலரை கண் கலங்க வைத்தது. சிறுவயதிலேயே தனக்கு பெண் தன்மை இருப்பதை உணர்ந்த நமிதா பெண்ணாக தன்மை ஆசைப்பட்ட உள்ளார்
ஆனால் அதை பெற்றோர்கள் ஏற்க மறுத்து இருக்கிறார்கள் இதனால் பலமுறை அவரை அடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள் மேலும் இவரை மறுவாழ்வு மையத்தில் கூட சேர்த்து இருக்கிறார்கள்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தான் இவர் பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால், இவர் வெளியில் தெரிந்தது என்னவோ 2018 ஆம் ஆண்டுக்கு தெரிந்தது தான். மிஸ் இந்தியா டைட்டிலை வென்ற பின்னர் தான் இவர் வெளியில் தெரிய ஆரம்பித்தார்.
அதன் பின்னர் இவருக்கு பல படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடோடிகள் 2 உட்பட மொத்தம் 25 படங்களில் நடித்து இருக்கிறார்.அப்படி இருந்தவர் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் இருந்தே சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை
பதிவிட்டு பல லட்சம் லைக்குகளை எல்லாம் அள்ளி வருகின்றார். அப்படி இவர் இப்போது திருமண கோலத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோ பலரையுமே வியக்க வைத்து இருக்கின்றது.