அட அருந்ததி படத்தில் நடித்த குட்டி அனுஷ்காவா இவங்க ..? அடேங்கப்பா , எப்படி உள்ளார் என்று தெரியுமா ..!! இதோ ..!!

Uncategorized

அட அருந்ததி படத்தில் நடித்த குட்டி அனுஷ்காவா இவங்க ..? அடேங்கப்பா , எப்படி உள்ளார் என்று தெரியுமா ..!! இதோ ..!! திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு, பல குழந்தைகள் வளர்ந்து இருக்கின்றனர்… பேபி ஷாலினியில் ஆரம்பித்து., தெய்வத்திருமகள் சாரா, என்னை அறிந்தால் அனிகா வரை, குழந்தைகளாக பார்த்த பிரபங்களா இவர்கள் என ஆச்சர்யமாக பலரை பார்த்திருக்கிறோம்…

அதே போல், அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படம், தமிழ், தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைத்தந்தது.. அனுஷ்காவிற்கு புகழையும், வாய்ப்பையும் வாரி வழங்கிய அந்தப்படத்தில், சிறு வயது அனுஷ்காவாக நடித்த அந்த குழந்தையை, அவ்வளவு சீக்கிரம் மறந்து விடமுடியாது… வெறும் பதினைந்து நிமிடம் திரையில் அந்த சிறுமி வந்திருந்தாலும், அதன் ஆளுமை, திறமை எல்லாம் மனதில் பதிந்திருக்கும்…

நடிகை அனுஷ்காவின் அதிரடியான நடிப்பில், கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகிய இந்தப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது.. வெளியான அத்தனை மொழிகளிலுமே மாபெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது…

இந்தப்படத்தில் நடித்த அந்த சிறு வயது அனுஷ்காவின் பெயர் திவ்யா நாகேஷ்,.. இவர் மும்பையை சேர்ந்தவர். படிப்பிற்காக, சிறுவயதிலேயே இவர்களின் குடும்பம், சென்னையில் செட்டில் ஆகியுள்ளது.. இவர் சென்னையிலுள்ள, செயின்ட் ஜோசப் பள்ளியிலும், திருச்சியில் உள்ள ஒரு பள்ளியிலும் அவர் பள்ளிப்படிப்பை முடித்தார்…

விளையாட்டின் மேல் உள்ள ஆர்வத்தால், கிரிக்கெட்டில் கோச்சிங்-ல் சேர்ந்துள்ளார்… அன்று ஒரு நாள் காய்ச்சல் என விளையாட செல்லாமல், மைதானத்திற்கு அருகில் அமர்ந்திருக்கிறார்… அந்நேரம், அங்கு ஏ.வி.எம் ஸ்டுடியோஸ், ஒரு தெலுங்கு சீரியலை சூட்டிங் செய்து வந்துள்ளனர்… அதைப்பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவை, அந்த சீரியலின் இயக்குநர், திவ்யாவை நடிக்க கூப்பிட்டுள்ளார்…

அதன் பின்னர், அவரின் பெற்றோரிடம் சம்மதத்தை வாங்கியவர், அந்தப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.. அதன் பின், பல தெலுங்கு, தமிழ் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.. அதன் பின் அந்நியன் படத்தில் விக்ரமின் தங்கையாகவும்.. நடித்திருப்பார்.. அது வெற்றியடைய, ஜில்லுன்னு ஒரு காதல், அது ஒரு கனா காலம், பொய் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்…