தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகை குஷ்பு. கடந்த 2000 ஆம் ஆண்டில் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து இரு மகள்கள் இருக்கிறார்கள். உடல் எடையை ஏற்றியதால் சினிமாவில் நடிக்க சில காலம் ஒதுங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது 50 வயதான குஷ்பு முற்றிலும் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இதை பார்த்த பலருடம் பாராட்டுக்கூறி மெசேஜ் செய்து வருகிறார்கள். அதில் ஒரு ரசிகர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மெசேஜ் செய்திருந்தார். அதற்கு குஷ்பு, குஷ்பூ ரொம்ப லேட்டா.
21 ஆண்டுகள் ஆகிவிட்டது. என் கணவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று பொறுமையாக பதிலளித்திருந்தார். மீண்டும் ஒரு ரசிகர், கணவர் என்ன பதிலளித்தார் என்று கேட்டுள்ளார். அதற்கு குஷ்பு அமைதியாக பதிலளித்துள்ளார். நான் அவருக்கு ஒரு மனைவி மட்டும் தான். அதனால் சாரி கூறி என்னை விட்டு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார் என குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
Unfortunately I am his only wife.. so he says sorry. Not ready to give up. ?????? https://t.co/8oSNbI7oPL
— KhushbuSundar (@khushsundar) August 22, 2021