அட ஈரோடு மகேஷூக்கு இவ்வளவு அழகான மனைவியா..?? அடேங்கப்பா இவரது மகள் சீரியலில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாரே..? இதோ நீங்களே பாருங்க ..!!
ஈரோடு மகேஷ் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், எழுத்தாளர், வீடியோ ஜாக்கி மற்றும் கல்வியாளர். அவர் தொலைக்காட்சி துறையில் தனது பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர் மற்றும் தற்போது நகைச்சுவை நடுவர்களில் ஒருவராக பணியாற்றுகிறார் .
ஈரோடு மகேஷ் ஈரோட்டில் 1981 ஆம் ஆண்டில் பிறந்தார். பெற்றோர் திரு. சந்திரசேகரன்; திருமதி. மீனாட்சி ஆவார்கள். பள்ளிப் படிப்பை ஈரோட்டில் உள்ள இரயில்வே காலனி நகரவை மேல் நிலைப் பள்ளியில் பயின்றார். தமிழ் இள நிலை பட்டப் படிப்பை மயிலாடுதுறை ஆதினக்
கல்லூரியிலும் தமிழ் மேல் நிலை பட்டப் படிப்பை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் பயின்றார். தற்பொழுது தமிழில் முனைவர் (Phd.,) பட்டப் படிப்பைத் தொடர்கிறார். மேலும் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் மகேஷ், சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு அமிழ்தா என்ற அழகிய மகள் உள்ளார். மகேஷ் தான் எப்பொழுது மேடையில் பேசினாலும் தனது வெற்றிப் பயணத்திற்கு காரணம் மூன்று பெண்கள்தான். அவர் என் தாய், மனைவி, மகள் என அடிக்கடி கூறுவார். மகேஷின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.