அட சூப்பர் சிங்கரில் புதிதாக என்ட்ரியாக போகும் குக் வித் கோமாளி பிரபலம்.. புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று வியந்து போன ரசிகர்கள் ..!!
விஜய் டிவியின் ஒவ்வொரு வருடமும் திறமையான பாடகர்களை தேர்வு செய்யும் விதத்தில் சூப்பர் சிங்கர் என்ற ரியாலிட்டி ஷோவானது ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் சீனியர் சூப்பர் சிங்கர் நடைபெற்று அதில் ஸ்ரீதர் சேனா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன்8 நிகழ்ச்சியானது துவங்கப்பட உள்ளது. இதில் பாடகி சின்னகுயில் சித்ரா உட்பட நான்கு நடுவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திறமையான ஜூனியர் சூப்பர் சிங்கரை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன்8 நிகழ்ச்சி விரைவில் துவங்கப்பட உள்ளதால் அதற்கான ப்ரோமோ தற்போது ரிலீசாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமடைந்த பிரியங்கா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறார்.
ஆகையால் அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி சூப்பர் சிங்கர் சீசன்8 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இந்தத் தகவல் தற்போது சிவாங்கியின் ரசிகர்களிடையே பரவலாகப் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
மேலும் சிவாங்கி கடந்த சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. எனவே பாடகரும் பக்கா என்டர்டைன்மென்டருமான சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் ஒரு கலக்கு கலக்க போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
ஏனென்றால் இவரது கொஞ்சல் நிறைந்த எதார்த்தமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். எனவே ஜூனியர் சூப்பர் சிங்கரில் குழந்தைகளோடு குழந்தைகளாக சிவாங்கி அடிக்கும் லூட்டியை பொறுத்திருந்து பார்ப்போம்.