அட , சூப்பர் சிங்கர் மாளவிகாவுக்கு டும் டும் கல்யாணம் !! சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு மின்னும் மாப்பிள்ளை!! இணையத்தில் வைரலாகும் ஜோடியின் புகைப்படம் இதோ !!

சினிமா

சின்னத்திரையில் இதுவரை பல வெற்றி பெற்ற நிகழ்சிகள் பல இருக்கின்றன. அப்படி அதிகமாக மக்களை ரசிக்க வைத்த நிகழ்ச்சியாக இன்றுமே இருந்து வருவது சூப்பர் சிங்கர் தான். பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் என்றாலுமே இன்னுமே அதே அளவிற்கு பார்வையாளர்களை கொண்டுள்ள ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீசன் ஒன்றிலிருந்து 7 வரை வெற்றிகரமாக முடிந்துவிட்டது இந்தநிலையில் 8வது சீசன் கோலாகலமாக துவங்கிய தற்பொழுது பைனல் வரை சென்று விட்டது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் மாளவிகா

சில நாட்களாகவே இவருக்கு திருமணம் நடக்க போகிறது என்ற செய்தி மிக வேகமாக சமூக வலைதளங்களில் பேசபட்டு வந்தது. இப்பொது வரே அந்த செய்தியினை உறுதி படுத்தும் விதமாக வருங்கால கணவருடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். மாளவிகா சுந்தர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் இவர் பாடும் பாடலுக்காகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இதுவரை தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியில் கூட ஒரு பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அதிலும் பைனல் வரை சென்று விட்டார். ஆனால் மாளவிகா அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவார்

அப்படி அவர் வெளியிட்டு இருக்கும் புகைபடத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. அதில் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்ற தகவலுடன் தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் வருங்கால கணவருடன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம.