கடந்த சில மாதங்களாக திரையரங்குகளில் படங்கள் வெளியாகி வரும் நிலையில் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவை காட்டிலும் ஹீரோயினுக்கே பெருமளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்த ஹீரோயினும் தனது அழகாலும் மேலும் தேர்ந்த நடிப்பாலும் மக்கள் மனதில் வெகுவாக இடம்பிடித்தார். இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை பிரியங்கா அருள் மோகன்.
கன்னட திரையுலகில் பிரபல இயக்குனர் கிரீஸ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளிவந்த ஒந்து கத ஹெலு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல படங்களில் பல இளம் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே பிரியங்கா மோகன் திகழ்ந்து வருகிறார்.இவ்வாறு தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்த
பிரியங்காவிற்கு டாக்டர் படமே தமிழில் முதல் படமாகும் இருப்பினும் தனது நடிப்பால் முதல் படத்திலேயே ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.
டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இவரது சட்டையில் பட்டனை திறந்தபடி ஒரு பக்கம் சட்டையை இறக்கிவிட்டு போஸ் கொடுத்து இருப்பதை கண்டு பலர் ஷாக்காகி இருக்கின்றனர்.