அட தொகுப்பாளினி டிடி கர்ப்பமாக உள்ளார்களா..? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!
தொகுப்பாளினிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப்பில் இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும். டிடி விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
திவ்யதர்சினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்
திவ்ய தர்ஷினி K. நீலகண்டனிற்கும் N. ஸ்ரீலதா விற்கும் 17 பிப்ரவரி 1985 அன்று ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவரது சகோதரியான பிரியதர்ஷினியும் தொகுப்பாளினி ஆவார். இவரின் தம்பி விமானஓட்டி ஆகவும் உள்ளார்.
டிடி ஸ்ரீகாந்த் என்பவரை கல்யாணம் செய்து பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். அதன்பின் அவரது கல்யாணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வந்ததில்லை.
இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர். ஆனால், விசாரிக்கையில் அந்த புகைப்படம் சுந்தர்.சி படத்தில் டிடி கர்ப்பமாக இருக்கும் போது நடந்த சீமந்த காட்சி புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. இதோ நீங்களே பாருங்க,