அட நடிகர் விஜய் வசந்திற்கு இவ்வளவு பெரிய மகன், மகள் உள்ளார்களா..??வெளியான புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள் ..!!

Uncategorized

தமிழகத்தில் வசந்த்&கோ என்ற பிரம்மாண்ட கடை நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் வசந்தகுமார், இவர் கடந்த வருடம் கொரோனா நோய் ஏற்பட்டு அதில் இருந்து குணமடைந்தும் உயிரிழந்தார்.

அவர் அரசியலிலும் பெரிய ஈடுபாடு காட்டி வந்திருக்கிறார். அவருக்கு பிறகு தனது அப்பாவின் அரசியல் பயணத்தில் தற்போது வசந்த் பயணித்து வருகிறார்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டு தனது தொகுதியில் வெற்றியும் பெற்றார் விஜய் வசந்த்.

சினிமாவிலும் சென்னை 28, வேலைக்காரன், நாடோடிகள், சரோஜா என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சமூக வலைதளத்தில் விஜய் வசந்தின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அவர் தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்த அழகி புகைப்படம் தான் அது, அதைப்பார்த்த ரசிகர்கள் அட விஜய் வசந்திற்கு இவ்வளவு பெரிய மகன், மகளா என கமெண்ட் செய்து வருகின்றனர்.