பிரபல தமிழ் திரைபட தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நடித்த “18வயசு ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை காயத்ரி ஷங்கர். கதாநாயகியாக பள்ளி பருவ காலத்திலேயே கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய் சேதுபதியுடன் அதிக படத்தில் நடித்த நடிகை என்று பெயர் பெற்றவர். பெங்களூரில் வளர்ந்தாலும் இவரின் பூர்விக்கம் தமிழகம் தான். இவரது தாத்தா திருச்சியை சேர்ந்தவர். 1993 ஆம் ஆண்டு பிறந்த நடிகை காயத்ரி ஷங்கர் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” என்ற படத்திலும் நடித்தார்.
தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், விஜய் சேதுபதியுடன் மட்டும் 5 படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அதிக படத்தில் நடித்துள்ள ஒரே நடிகையும் இவர் தான். தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்திலும் நடித்து வருகிறார்.
எத்தனையோ படங்கள் நடித்தாலும் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் படத்தில் வரும் ‘ப்பா யார் டா இந்த பொண்ணு ‘ப்பா மாதிரி இருக்கு மேக்கப் போட்டிருக்கு’ என்ற காட்சியில் இவரது யாராலும் மறக்க முடியாது.
மேலும், இது வரை நடித்த படங்களில் இவர் கவர்ச்சியாக நடித்ததும் இல்லை. அணைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அம்மணி சமீப காலமாக மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைபடங்களை வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை காயத்ரி படு கிளாமராக ஆடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த தனது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பிரபை வருகிறது. காயத்ரியை இப்படி ஒரு கிளாமர் அவதாரத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ காயத்ரியா இது..? என ஷாக் ஆகி வருகிறார்கள்.