அட நம்ம கலா மாஸ்டர் அவர்களின் கணவர் இவங்க தானா.? வெளியான புகைப்படத்தை பார்த்து அட இத்தனை நாட்களா இது தெரியாமல் போச்சே என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட நம்ம கலா மாஸ்டர் அவர்களின் கணவர் இவங்க தானா.? வெளியான புகைப்படத்தை பார்த்து அட இத்தனை நாட்களா இது தெரியாமல் போச்சே என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமாவில் பொறுத்தவரை நடன இயக்குனர்கள் தற்போது பல புதுமுக இயக்குனர்கள் உள்ளார்கள் இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பவர் என்றால் அது கலா மாஸ்டர் தான். எத்தனையோ நடன இயக்குனர்கள் இருந்த போதிலும் அந்த காலத்தில் இருந்து இப்போது வரை தனக்கென தனி ஒரு இடத்தை இன்றும் தக்க வைத்திருப்பவர் தான் கலா மாஸ்டர்.சிறு வயதிலேயே முறையாக நடன கல்வியை பயின்று அந்த வயதில் இருந்தே பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.இவர் முதன் முதலில் தனது 12 வயதிலேயே பிரபல இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படமான புன்னகை மன்னன் திரைப்படத்தில் மூலமாக நடன இயக்குனராக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியதோடு பல நடன கலைஞர்களை உருவாக்கியும் உள்ளார்.தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 4000 பாடல்களுக்கு மேலாக நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

மேலும் இவரது உறவினர்கள் பெரும்பாலும் நடன இயக்குனர்களாகவே இருக்கிறார்கள்.காயத்ரி ரகுராம், பிருந்தா,சுஜா ரகுராம் போன்ற பல நடன இயக்குனர்கள் இவர் வழி வந்தவர்களே.மேலும் இவர் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியதோடு சின்னத்திரையில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாடா மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் வெகு பிரபலமானார்.இந்நிலையில் இவர் 1997-ம் ஆண்டு கோவிந்தராஜன் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. இப்படி இருக்கையில் இவர்கள் 1999-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.இவ்வாறான நிலையில் பல வருடங்கள் தனித்து வாழ்ந்து வந்த கலா அவர்கள் 2004-ம் ஆண்டு மகேஷ்எனும் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு வித்யுத் எனும் மகனும் உள்ளார்.இந்த வகையில் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைராளாகி இருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து போனதோடு எப்படி உடல்

எடையை குறைத்தீர்கள் என பல்வேறு கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அவரது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.