அட நம்ம தொகுப்பாளினி பிரியதர்ஷனியின் கணவர் மற்றும் மகனை யாரும் பார்த்துள்ளீர்களா..? அட இவருக்கு இவ்வளவு பெரிய மகனா..? இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

நம்ம தொகுப்பாளினி பிரியதர்ஷனியின் கணவர் மற்றும் மகனை யாரும் பார்த்துள்ளீர்களா..? அட இவருக்கு இவ்வளவு பெரிய மகனா..? இதோ நீங்களே பாருங்க ..!!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி 20 வருடங்களுக்கு மேலாக இந்த துறையில் முன்னணியில் இருப்பவர். டிரண்டிற்கு ஏற்றார் போல் தன்னையும் அப்டேட் செய்து கொண்டே இருப்பார்.

தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியிலும் எப்போதும் மக்களை ஈர்க்கும் வண்ணம் நிறைய விஷயங்கள் செய்வார். இவரைப் போலவே இவரது அக்கா பிரியதர்ஷினியும் நல்ல தொகுப்பாளினி. இதுவரை 1000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என நடத்தியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1998ம் ஆண்டு விழுதுகள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை நாயகியாக களமிறங்கினார்.

அதன்பிறகு ஏகப்பட்ட தொடர்களில் நடித்துவந்த பிரியதர்ஷினி மானாட மயிலாட, பாய்ஸ் Vs கேள்ஸ் போன்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார்.

இப்போது கூட விஜய்யில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது பிரியதர்ஷினி தனது கணவர் ரமணா மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.