டிவி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சினிமா வரை சென்று பிரபலமான இமான் அண்ணாச்சி. இப்போது பிக் பாஸில் கலந்து கொண்டு இதுவரை அவரின் பிரபலத்தினை அப்படியே தான் பார்த்து வருகின்றார். நிகழ்சிக்கு நுழையும் போதே அப்படியே அண்ணாச்சி அவர்கள் கமல்ஹாசனை ஆங்கரிங் செய்து அழகாக வரவேற்று அசத்தினார். மேலும், இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறியது, எனக்கு 40 வயதுக்கு பின்னர் தான் வாழ்க்கையே துவங்கியது.நான் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை கையாள்வது போல இந்த நிகழ்ச்சியினை கையாளுவேன் என்று மிகவுமே பாசிட்டிவாக பேசிவிட்டு சென்று இருந்தார்.
மேலும் அடுத்து பிக் பாஸுக்கு சென்றாலே சேர்த்து வைத்த பெயர் எல்லாம் கெ ட் டு ப் போயிடும் எதுக்கு என்று பல பேர் சொன்னார்கள். பிக்பாஸ் 5வது சீசனில் காமெடி நடிகர் என்ற அடையாளத்தோடு சென்றிருப்பவர் இமான் அண்ணாச்சி
அவர் வரும் போது கூட கூறியது இந்த வீட்டிற்க்குள் சென்று நான் சினிமாவில் இருப்பதை போலவே எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயும் நான் எல்லோரையும் சிரிக்க வைப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் இந்த வீட்டிற்குள் சென்ற பின்னர் தங்களை யார் என்று புரிந்து கொள்ளலாம் என்று சொன்னார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. போகப்போகத்தான் தெரியும் அண்ணாச்சி சிரிக்கவைக்க போகிறாரா? இல்லையா என்பதெல்லாம், நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்போது அப்படியே அண்ணாச்சியை போலவே பாசிட்டிவாக பேசும் அவரின் குடும்பத்தின் போட்டோவும் இணையதள பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளின் பேச்சுகள் எல்லாமே அப்படியே அவரை போலவே கொஞ்சம் கிண்டல் கலந்த பேச்சாகவே இருந்து வருகின்றது.