அட நம்ம பிக்பாஸ் மதுமிதா-க்கு குழந்தை பிறந்ததா ..? என்ன குழந்தை என்று தெரியுமா .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட நம்ம பிக்பாஸ் மதுமிதா-க்கு குழந்தை பிறந்ததா ..? என்ன குழந்தை என்று தெரியுமா .. இதோ நீங்களே பாருங்க ..!!

மதுமிதா தமிழ் மொழி படங்கள் மற்றும் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவில் வரும் ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் அடிக்கடி நகைச்சுவை வேடங்களில் நடித்தார் மற்றும் ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். லொள்ளு சபை, கலக்க போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகர் சந்தானத்தின் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. சினிமாவிலும், சீரியல்களிலும் நடித்து வந்த மதுமிதா பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த அனபெல் சேதுபதி படத்தில் நடித்துள்ளார் . மதுவுக்கும் அவரின் உறவினர் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் கடந்த 2019-ம் வருடம் கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் குழந்தையும் தற்போது நலமாக உள்ளனர் எனத் தெரிவித்திருக்கின்றனர்.