அட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் இந்த பிரபல சீரியல் நடிகையை காதலிக்கிறாரா ..?? யார் அந்த நடிகை என்று தெரியுமா .. இதோ ..!!விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். இதில் நிறைய நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளது, முக்கியமாக கதாநாயகி மாற்றம் நடந்திருக்கிறது.இந்த தொடர் மூலம் பெரிய புகழ் பெற்ற ரோஷினி திடீரென தொடரில் இருந்து விலக அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.அண்மையில் நடிகை வினுஷாவிற்கு FInd Of The Year என்ற பட்டம் விஜய் டெலிவிருது விழாவில் கொடுக்கப்பட்டது.
அருண் பிரசாத் காதலிஇந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்து கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத். இவருக்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது, இந்த வருடம் இல்லை. ஆனால் இவரைப் பற்றிய ஒரு விஷயம் நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.அதாவது இந்த விருது விழாவில் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவிற்கு விருது கிடைத்தது.
அப்போது அவரை தொகுப்பாளர்கள் பாரதி, டாக்டர், DNA போன்ற விஷயங்களை கூறி கூறி கிண்டல் செய்தார்கள். எனவே அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிக்கிறார்களா என்ற பேச்சு மக்களிடம் எழுந்துவிட்டது.அந்நிகழ்ச்சிக்கு பிறகு அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா ஒன்றாக இருந்த வீடியோக்களை ரசிகர்கள் ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்,