தமிழில் களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா, திரைப்படங்களில் நடித்ததை விட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்ட ஓவியாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் குவிந்தனர் என்றே கூறலாம். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் அதிகமான திரைப்படங்களில் நடிகை ஓவியாவை பார்க்கமுடியவில்லை.
இந்நிலையில் நடிகை ஓவியா தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் எப்போதும் இணைந்தே உள்ளார்.
மேலும் தற்போது புடவை அணிந்த படி ஓவியா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் வரு த்தம டைய செய்துள்ளது. ஆம், அந்த புகைப்படத்தில் அவர் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டுள்ளதால், ரசிகர்கள் பலரும் அவரின் உடலை பாத்துக்கொள்ளும் படி கூறிவருகின்றனர்.