அட பிச்சைக்காரன் படத்துல அம்மாவாக வந்த நடிகையா இவங்க !! அட ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிச்சைக்காரன் படத்துல அம்மாவாக வந்த நடிகையா இவங்க !! அட ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்கள் எல்லா தரப்பு ரசிகர்களுமே கவர்ந்து இழுக்கும் ஒன்றாக இருந்து வருகின்றது. அந்த கதாபாத்திரத்தினை சினிமாவில் யார் நடித்தாலுமே பலரிடையே பிரபலமாக ஆகி விடுவார்கள் என்ற ஒரு செண்டிமென்ட் கூட இருந்து வருகின்றது. அப்படி பட்ட ஒருவர் தான் பிச்சைகாரன படத்தில் நடித்த இவர். விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் இடையே மிக பெரும் வரவேற்பினை பெற்றது எனலாம். விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி, மக்களிடையே பெரும் பேர் எடுத்தது இந்த திரைப்படத்தில் நடித்தவர் தான் நடிகை தீபா.

ரஜினியின் அருணாச்சலம் படத்தில் கூட நடித்து இருப்பார் இவர். அந்த படம் தான் இவருக்கு தமிழில் முதல் படமாக இருந்தது. தீபா ராமனுஜம் ஒரு திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல், தனது பிஸ்னசை பார்த்து கொள்ளும் ஒரு தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.இதுவரையில் இவர் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பெரும் புகழ்பெற்ற கே.பாலசந்தரின் பிரேமி உள்பட சில நெடுந்தொடர்களில் நடித்தவர் தீபா ராமாஜனும். நன்றாக சினிமா வாழ்க்கை சென்று கொண்டிருந் நிலையிலேயே ஒரு கட்டத்தில் வெளிநாட்டில்திருமணம் ஆகி செட்டிலாகி விட்ட அவர், கமலின் உத்தமவில்லன் படம் மூலம் திரைத்துரைக்கு மீண்டும் வந்தார். உத்தமவில்லனில் அரசி கெட்டப்பில நடித்தவர், பசங்க-2வில் பள்ளி ஆசிரியையாக நடித்தார்.

அதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகனில் அவருக்கு அம்மாவாக நடித்த தீபா ராமானுஜம், அதற்கடுத்து பிச்சைக்காரனில் விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்த பிறகு கவனிக்கப்படும் அம்மா நடிகையாகி விட்டார். 2020 ஆம் ஆண்டு முதல் தீபாவும் ஒரு தொழிலதிபராக மாறி, லோட்டஸ்லைன் என்ற பெயரில் கம்பனி நடத்தி வருகிறார்.

தற்போது அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர் அந்த தொழிளையே மட்டுமே இருந்து வருகிறார். அதனை மட்டுமே முழு கவனமாக இருக்கும் அவர் தற்போது எந்த படத்திலும் நடிப்பதை இல்லை என்கிறார்.பட வாய்ப்புகள் வந்தால் அதனை பற்றி யோசிக்கிகலாம் என கிண்டலாக சிரித்து கொண்டே கூறி இருக்கிறார்.