அட பிரபல சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்ததா ?? என்ன குழந்தை என்று தெரியுமா ?? இதோ அவரே வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

சினிமா

அட பிரபல சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்ததா ?? என்ன குழந்தை என்று தெரியுமா ?? இதோ அவரே வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

கயல் சீரியல் நடிகை அபி நவ்யா கர்ப்பமாக இருந்த நிலையில், இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. புகைப்படத்துடன் இந்த தகவலை அவர் வெளியிட, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலான, பிரியமானவளே மற்றும் கண்மணி போன்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அபி நவ்யா.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கெரியரை தொலைக்காட்சியில் துவங்கி, பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.சினிமாவில் இருந்து நிஜ வாழ்க்கையில் சேரும் பிரபலங்களை போலவே சின்னத்திரையிலும் நிறைய ஜோடிகள் உள்ளார்கள். அதில் அண்மையில் திருமணம் செய்து சேர்ந்தவர்கள் தீபக் மற்றும் அபிநவ்யா.இருவரும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள்.

அபிநவ்யா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரில் நடித்து வந்தார், தீபக் தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வருகிறார்.தீபக் தனியாகவும் சொந்த தொழில் செய்து வருகிறார்.அண்மையில் இந்த ஜோடி ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டார்கள், அதாவது அபிநவ்யா கர்ப்பமாக இருப்பதாக சீமந்த புகைப்படங்களுடன் அறிவித்தார்கள்.

இந்த நிலையில் இவர்களுக்கு மகன் பிறந்துள்ளார். மருத்துவமனையில் தனது மகன் அருகில் நின்று எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார் தீபக்.