அட பிரபல நடிகை மாளவிகாவின் கணவரை யாரும் பார்த்துள்ளீர்களா.. இதோ சமூக இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!
சித்திரம் பேசுதடி படத்தில் வரும் வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இன்றுவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த பாடலில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்திருப்பார் நடிகை மாளவிகா. உன்னை தேடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு,
மலையாளம், ஹிந்தி என முன்னணி நடிகையாக இருந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார். அத்தோடு திரையுலகை விட்டு விலகிய இவர், சுமேஷ் மேனன் என்பவரை கல்யாணம் செய்துகொண்ட நடிகை மாளவிகாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
எனினும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் தலைகாட்டும் நடிகை மாளவிகா ரசிகர்களை கவரும் வகையில் பதிவுகளை வெளியிடுகிறார். இதுவரை பெரிதாக வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
இதோ அந்த புகைப்படம்.