அட பிரபல பாக்கியலட்சுமி சீரியலில் புதிய செழியன் இவர்தானா..? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள்..!!

சினிமா

அட பிரபல பாக்கியலட்சுமி சீரியலில் புதிய செழியன் இவர்தானா..? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து ஆர்யன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வரிசையில் தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலும் இணைந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலும் ஒன்று. சீரியல் ஒளிபரப்பான ஆரம்ப நாட்களில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருந்த சீரியல், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக தொலைக்காட்சியின் ப்ரைம் டைமான இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

குடும்ப தலைவியின் கதையை மையமாக கொண்ட இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் நல்ல இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் செழியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்து வருகிறார்

இத்தொடரில் முதன்முறையாக ஒரு நடிகர் மாற்றம் நடந்துள்ளது. செழியனாக நடித்துவந்த ஆர்யன் தொடரை விட்டு விலக அவருக்கு பதிலாக தற்போது புதிய நடிகர் நடிக்க வந்துள்ளார்.

இந்நிலையில் பாக்யலட்சுமியில் புது செழியன் யார் என்பது பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.அவர் யார் என்பது பாக்கியலட்சுமி புரொமோவுடன் வெளியாகியுள்ளது. புதிய செழியன் வரும் முதல் காட்சியே வீட்டில் சண்டையோடு காட்சிகள் காட்டப்படுகின்றன.ராஜபார்வை, முள்ளும் மலரும் போன்ற தொடர்களில் இதற்கு முன்பு நடித்து இருக்கும் நடிகர் விகாஷ் சம்பத் என்பவர் தான் புது செழியன் ஆக நடிக்கிறார்.