அட பிரபல முன்னணி நடிகை கர்ப்பமாக இருக்காங்களா..? யார் அந்த நடிகை என்று தெரியுமா..? இதோ அவரே வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகை கர்ப்பமாக இருக்காங்களா..? யார் அந்த நடிகை என்று தெரியுமா..? இதோ அவரே வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

கன்னட நடிகையான பிரணிதா சுபாஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘உதயன்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.அதனைத்தொடர்ந்து, கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’ உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினாக நடித்து கவனம் பெற்றார்.

கடைசியாக, அதர்வா முரளியுடன் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்தவர், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், பிரணிதா சுபாஷ் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபரான நிதின் ராஜுவை திருமணம் செய்துகொண்டார்.

ஊரடங்கு காலத்தில் அவருடைய திருமணம் இரு வீட்டாரின் மிகச்சிலர் மட்டுமே கலந்து கொண்டு நடைப்பெற்றது.இந்நிலையில் நடிகை பிரணிதா அவருடைய கணவரின் பிறந்தநாளில் அவர் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.விரைவில் தங்கள் வீட்டில் ஒரு தேவதையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.

அவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pranitha Subhash ? (@pranitha.insta)