அட பிரபல முன்னணி பாடகி-க்கு திருமணம் முடிந்ததா..? அட மாப்பிளை இந்த பிரபலம் தானா .? இதோ வெளியான அழகிய திருமண புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

சினிமா

அட பிரபல முன்னணி பாடகி-க்கு திருமணம் முடிந்ததா..? அட மாப்பிளை இந்த பிரபலம் தானா .? இதோ வெளியான அழகிய திருமண புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி, ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படிப் பாக்காதடி, வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடிய ஸ்வாகதா கிருஷ்ணன் தான் திரைக்கு வரும் அந்தக் குயில்.

திரைத்துறைக்குள் ஏற்கெனவே நுழைந்துவிட்டாலும் பின்னணிப் பாடகியாக மட்டுமே உலா வந்தவர் ஸ்வாகதா. ஆனால், அவர் இசையமைத்து, பாடி, நடித்து வெளியிட்ட அடியாத்தே என்ற ஆல்பம் அவருக்கு புதிய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

அந்த ரசிகர்கள் அவரின் குரலுடன் சேர்த்து நடிப்புக்காகவும் கிடைத்தவர்கள்.ஸ்வாகதா இசையமைத்து, பாடி, நடித்த அடியாத்தே பாடலை கெளதம் வாசுதேவ் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா. பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குனர் திரு, அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அவர் தற்போது பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் அக்ஷய் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். ரிஷிகேஷில் கங்கை நதி கரையில் தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது. கடந்த வாரம் நடந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வெளியான அழகிய திருமண புகைப்படங்களை நீங்களே பாருங்க ..