அட புகைப்படத்தில் இருக்கும் குட்டி குழந்தை யார் என்று தெரிகிறதா..? அடேங்கப்பா இந்த பிரபல முன்னணி நடிகையா என்று வாயைப்பிளக்கும் ரசிகர்கள் ..!!
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தவர் தான் இளம் நடிகையான நடிகை அம்மு அபிராமி. இந்த படத்தை தொடர்ந்து ‘ராட்சசன்’ படத்தில் ஒரு அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்தார் இவர். இந்த படத்தில் இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது, என்று சொல்லலாம்.
நடிகர் கார்த்தி நடித்து வரும் படத்தில் மீண்டும் கமிட்டாகியுள்ளார். மேலும், இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், ஜோதிகா, சத்யராஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படத்தில் தான் அம்மு அபிராமி நடிக்கிறார். இந்த படம் குறித்து சமூக வலைதளத்தில் நடிகை அம்மு அபிராமி கூறியுள்ளதாவது…
“ஜோதிகா மற்றும் சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், ‘தீரன்’ அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் இரண்டாவது முறையாக நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்”.
மேலும், இவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது “அசுரன்” படம் தான். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். இந்நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.