அட ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த இந்த நடிகையா இது ..? அடேங்கப்பா , ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே .. இதோ நீங்களே பாருங்க ..!!!தமிழில் பல முன்னணி நடிகைகளை விடவே சில படங்களில் துணை நடிகைகள் அதிகமாக கவனிக்கபடுவார்கள். அப்படி பல நடிகைகள் இன்று துணை நடிகர்களாக இருந்து கதாநாயகியாக மாறி இருக்கின்றார்கள். அப்படி விஜய் சூர்யா என்று இரு பெரிய நடிகர்கள் சேர்ந்து நடித்து மெகா ஹிட்டான படம் ப்ரெண்ட்ஸ். இந்த படத்தில் பலருமே கவனிக்க மறந்த நடிகை தான் அபிநயா ஸ்ரீ.தமிழில் பல முக்கிய நடிகர்கள் நடித்த் படத்தில் நடித்து இருந்தாலுமே கூட அவரை பற்றி பெரிய அளவில் யாருக்கும் தெரியாது. 90களிலேயே கிளாமர் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகையான அனுராதாவின் மகள் தான் இந்த நடிகை. நடிகை அபிநயஸ்ரீ திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த நடன இயக்குனரும் ஆவார்.
ப்ரெண்ட்ஸ் படத்திற்கு பின்னர் பல தமிழ் படங்களில் இவர் ,கிளாமர் வேடங்களில் நடித்து இருகின்றார். ஆனால் அவர் நடித்த மற்ற படங்கள் எதுவுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
அதனால் இன்னுமே நடன இயக்குனராக மட்டுமே சினிமாவில் தொடர்ந்து வருகின்றார். இந்த படத்தில் நடிகை அபிநயஸ்ரீ விஜய்யை ஒருதலையாக காதல் செய்யும் பெண்ணாக நடித்து இருந்தார்.
மேலும்அவர் பகிர்ந்து கொண்ட ஒரு தகவல், இந்த படத்தில் அவர் நடித்த போது அவருக்கு 13 வயது தான் ஆகியிருந்ததாம். இது குறித்து சமீபத்தில் இவர் பேட்டி அளித்து இருந்தார்.
அதில் அவர் கூறியது, பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் போது எனக்கு 13 வயது தான் ஆனது. அதனால் என்னுடைய அம்மா அனுராதா அவர்கள் படத்தில் நடிக்க கூடாது என்று தடுத்தார்கள். நான் அடம் பிடித்து தான் விஜயுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன்
மேலும் அந்த படத்தில் நான் நடித்த நேரம் நான் வயதிற்கு வந்த 4, 5 மாதங்களே ஆனா நேரம். அந்த படத்தில் நடிக்கும் போது விஜய் உள்பட பலருமே நான் மிகவும் பெரிய பெண் என்றுதான் நினைத்தார்கள் அவர்களுக்கு எல்லாம் நான் மிகவும் சின்ன பெண் என்பதை
சொல்ல விரும்பினேன் என்று கூறியுள்ளார் அபிநயா. பிரண்ட்ஸ் படத்திற்கு பின்னர் இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து இருந்தார். மேலும், இவர் பல படங்களுக்கு நடன இயக்குநரககவும் பணியாற்றி இருக்கிறார்.