அட வலிமை பட வில்லன் நடிகருக்கு திருமணம் நடந்து முடிந்ததா..?? இதோ இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
அஜித் நடித்திருந்த வலிமை படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா . படம் கலவையான விமர்சனங்கள் பெற்று இருந்தாலும் அதில் வரும் சண்டை காட்சிகளுக்கு நல்ல பாராட்டு கிடைத்து இருந்தது.வில்லன் கார்த்திகேயா உடன் அடியாளாக வரும் ரோலில் மலையாள நடிகர் துருவன் நடித்து இருந்தார். கார்த்திகேயா சாத்தானின் அடிமைகள் என்ற கேங் நடத்தி வருவது போல காட்டப்பட்டது.
அந்த கேங்கில் முக்கிய நபரான அமித் என்ற கதாபாத்திரத்தில் துருவன் நடித்தார்.கடந்த வருடம் நவம்பரில் வில்லன் நடிகர் கார்த்திகேயா கல்யாணம் செய்து கொண்டார். தற்போது நடிகர் துருவனுக்கு கடந்த 28ம் தேதி எளிமையான முறையில் கல்யாணம் நடைபெற்றது .
கேரளாவில் பாலக்காட்டில் கல்யாணத்தில் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். துருவன் தனது சமூக இணையதள பக்கத்தில் தனது கல்யாண புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..
View this post on Instagram