அட வானிலை செய்தி வாசிப்பாளர் வி ஜே மோனிகாவை தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? அடேங்கப்பா , இவருக்கு மகனும் இருக்குறாரா..? இதோ வை ரலாகும் புகைப்படம்..!!

சினிமா

வானிலை செய்தி வாசிப்பாளர்களில் பிரபலமானவர் மோனிகா. வானிலை செய்திக்குப் பிறகு இவர் சினிமா, சீரியல் என பிஸியாக நடித்து வந்தார். பின் சோசியல் மீடியா பக்கம் வந்தார். இவர் சீரியல், சினிமா பக்கம் ஆளையே காணோம். சோசியல் மீடியாவில் சமூக பிரச்சனை, அரசியல் என பல விஷயங்கள் குறித்து தைரியமாக பேசி வீடியோக்கள் வெளியிட தொடங்கினார். இவர் வெளியிட்ட வீடியோவின் மூலம் இவருடைய செய்தி வாசிப்பாளர் வேலைக்கு பிரச்சினை வந்தது. இதனால் மோனிகா வேலையை உதறி விட்டார். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக சோசியல் மீடியாவில் இவருடைய வீடியோக்களும் குறைய தொடங்கியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியது,

நான் திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாள் மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். ஆனாலும், சீரியல், சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், நான் கொண்டு பிடித்த கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தேன். இடையில் தான் எனக்கு ஒரு வி பத்து ஏற்பட்டது. அதனால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது.

சோசியல் மீடியா வீடியோ என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். நான் எந்த ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக கிடையாது. அது மட்டுமில்லாமல் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று நான் வித்தியாசம் பார்க்காமல் என் மனதுக்கு சரி என்று தோன்றும் விஷயங்களை தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

அப்படி வெளியான சில வீடியோக்களில் எனக்கு வேறு மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட்டது. நான் வீடியோவில் பேசின விஷயங்கள் எல்லாம் நியாயமாக இருக்கா? இல்லையா? என்று பார்க்காமல், நான் பேசவே கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள்.சமீபத்தில் கூட ஜெய் பீம் படம் குறித்து இவர் சூர்யாவிற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவிற்கு கீழ் கூட இவருக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டும் என்பது தான் இவரது கனவு. ஆனால், இவருக்கு கிடைத்ததோ இரண்டு நிமிடங்கள் வரும் வானிலை அறிக்கை தான்.

ஆனால், அந்த இரண்டு நிமிட வீடியோ மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார் மோனிகா. இவரது கணவர் ”செவன் மைல்ஸ் பெர் செகண்ட்’ என்கிற பொலிட்டிகள் பிராண்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். Lkg படத்தில் பிரியா ஆனந்த் செய்யும் அதே வேலை தான். மேலும், இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். சமீபத்தில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தன் மகனுடன் கலந்துகொண்டு இருக்கிறார்.