அட 10 வயதில் மகன் இருக்கும் நிலையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஆர்யா பட நடிகை!! அட இவரா? என ஆ ச்சரிய த்தில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஆர்யா மற்றும் நவ்தீப் நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமிக்ஷா. மேலும் இவர் அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி போன்ற மொழிகளில்  படங்கள் நடித்துள்ளார்.

இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.  ஏற்கனவே திருமணமாகி வி வாகரத் தான அவருக்கு சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரும், பாடகருமான சயீல் ஆஸ்வால் என்பவருடன் கடந்த 3ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. சயீல் ஆஸ்வாலுக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.

அவருக்கு 17 வயதில் சொஹானா என்ற மகளும் 16 வயதில் ஷுவம் என்ற மகனும் உள்ளனர். நடிகை சமிக்ஷாவிற்கும் 10 வயதில் அமிபிர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திருமணம் குறித்து சமிக்ஷா கூறுகையில், சிங்கப்பூரில் இருக்கும் குருத்வாரா ஒன்றில் எங்களின் திருமணம் எளிமையாக நடைபெற்றது.

நான் திரைத்துறைக்கு குட்பை சொல்லி விட்டேன். நான் திரைக்கதை எழுதுதல், இயக்கம், தயாரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தப் போகிறேன். எனது மாமனாரின் தயாரிப்பு நிறுவனத்தையும் கவனித்து கொள்ளப் போகிறேன் என கூறியுள்ளார்.