அட 10 வருடங்களுக்கு பின் இப்படியா! 16 வயதாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய விக்ரமின் ரீல் மகள் பேபி சாரா! இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!

சினிமா

குழந்தை நட்சத்திரங்கள் தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு பொட்டோஷுட் எடுத்து டிரெண்ட்டாகி வருவதுண்டு. அந்தவரிசையில், அனிகா, எஸ்தர் அனில், ரவீனா தாஹா உள்ளிட்ட பல குழந்தை நட்சத்திரங்கள் தற்போது பேசப்படும் பிரபலங்கள் வரிசையில் இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து பெரிய ஹிட் கொடுத்த தெய்வத்திருமகள் படத்தில் அவருக்கு மகளாக நடித்து அறிமுகமாகியவர் குட்டி சாரா அர்ஜுன்.

இப்படத்தில் சிறப்பான நடிப்பை காட்டி மக்கள் மனதினை ஈர்த்து வந்த சாரா இதையடுத்து ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் மீண்டும் நடித்தார். விழித்திரு, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

குட்டி குழந்தையாக பார்த்த சாரா அர்ஜுன் தற்போது வளர்ந்து இளம் நடிகையை போல் மாறியுள்ளார். அவர் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இயக்குநர் மணிரத்னம் படமான பொன்னியின்செல்வன் படத்தில் சிறுவயது நந்தினி கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.