அட 13 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள இது தான் காரணமா..? பிரபல சீரியல் நடிகை எடுத்த திடீர் முடிவு..!! வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள்..!!பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி, இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஜெனிப்பர்.
இந்த சீரியலின் மூலம் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வந்த போதே திடீரென பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் ஜெனிப்பர்.
மேலும் அத்தொடரில் இருந்து விலகிய கொஞ்ச நாட்களிலே ஜெனிப்பர் தான் கர்பமாக இருப்பதை யூடியூப் சேனலின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் ஜெனிப்பர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியொன்றில் “நான் கர்பமாக இருப்பது என் மகனுக்கு தான் அதிக சந்தோஷம்.
அவன் தான் என்னிடம் எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று கேட்பான். அவனுக்கு துணையாக யாராவது வேண்டும் என்பதற்காக இந்த முடிவெடுத்தேன்.
13 வருடங்களாக இரண்டாம் குழந்தையை தள்ளிவைத்து வந்தேன். அதற்கு பின் கொ ரோ னாவில் என்ன நடக்கும்னு தெரியாது அப்போதுதான் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.