அட 41 வயதில் நடிகை நமீதா கர்ப்பமாக உள்ளாரா ..?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

அட 41 வயதில் நடிகை நமீதா கர்ப்பமா – இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

நமிதா வங்கவாலா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

நமீதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். நமீதா 1998-ம் ஆண்டு சுரத் நகரின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து.

தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு நமீதா – வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது 41 வது பிறந்தநாளில் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார் நமீதா.

அதில், கூறியதாவது, தாய்மை.. புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, ​​புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது.,

நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இன்று 41-வது பிறந்தநாள் கொண்டாடும் நமீதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.