அப்போதே தனது 22 வயதில் 65 வயது பாட்டியாக நடித்த இன்றைய பிரபல நடிகை..!! பாக்கியராஜின் கட்டாயத்தினால் தி சைமா றிய அவரது வாழ்க்கை..!! அவர் யார் தெரியுமா..?

சினிமா

பொதுவாக பெண்கள் அனைவரும் இளமையாக தன்னைக் காட்டிக் கொள்வதைத்தான் விரும்புவார்கள். அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். பெரும்பாலான நடிகைகள் படங்களில் இளமையான தோற்றத்தில் மட்டுமே நடிக்க விரும்புகிறார்கள். ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கவே தயங்கும் நடிகைகளுக்கு மத்தியில் சில நடிகைகள் மட்டுமே வயதான கதாபாத்திரத்தை ஏற்கிறார்கள். உதாரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற சில நடிகைகள் வயதான தோற்றத்தை தைரியமாக ஏற்று நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் அந்த காலத்திலேயே 22 வயதில் 65 வயது கேரக்டரில் நடித்த நடிகை என்றால் அது கோவை சரளா மட்டும் தான். தற்போது தான் பெண் நடிகைகள் அதிகமாக உள்ளனர். ஆனால் அந்த 80 காலங்களில்  பெண் நடிகைகள், அதுவும் காமெடி நடிகைகள் மிகவும் கு றை வு. மனோரமா போன்ற ஒரு சில காமெடி நடிகைகள் மட்டுமே இருந்து வந்தனர்.

அந்த வரிசையில் பெண் காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கோவை சரளா. மனோரமாவிற்கு அடுத்த படியாக கோவை சரளா one women armyயாக தமிழ் சினிமாவில் காமெடியில் க லக்கி வந்தார். தற்போதும் நிறைய படங்களில் காமெடி செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவை சரளா குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய அந்த சமயத்தில் 22 வயதேயான கோவை சரளா 65 வயது கேரக்டரில் நடித்தாராம்.  பாக்யராஜ் நடிப்பில் வெளியான சின்ன வீடு படத்தில் கோவை சரளா பாக்யராஜ்க்கு அம்மாவாக நடித்திருப்பார். அந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்யராஜ் தான் கோவை சரளாவை அந்த கேரக்டரில் நடிக்கச் சொன்னாராம். ஆனால் கோவை சரளா அந்த கெட்டப் யாருக்குமே பி டி க்கக் கூடாது என வேண்டி கொண்டே தான் ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் பாக்யராஜ் அவரை தேர்வு செய்து விட்டாராம். சின்ன வீடு படத்திற்து பிறகு சுமார் 25 படங்களில் கோவை சரளா அம்மா கெ ட்டப் போட்டு நடித்தாராம். அந்த சிறிய வயதில் இத்தனை படங்களில் அம்மா கேரக்டர் நடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் கோவை சரளா சிறிதும் யோசிக்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தற்போது டாப் நடிகையாக உள்ளார். இதனால் அவரது சினிமா வாழ்க்கை நடிகை என்ற கோணத்தில் இருந்து வயதான தோற்றம், குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி கதாபாத்திரம் என்று மாறி விட்டதாம்.