அப்போ ஜிம்முக்கு போக 100 ரூபாய் கூட கட்ட முடியாமல் இருந்த பிரபல நடிகரின் நிலைமை .. இப்போ தமிழ்சினிமாவை கொண்டாடும் அந்த சூப்பர் ஹீரோ யார் என்று தெரியுமா.?

சினிமா

கிரிக்கெட் வீரராக, கால்பந்து ஆட்டக்காரராக, சைக்கிளிங், நடிப்பு, பாக்ஸிங் என்று பல முகங்களைக் கொண்டவர் தான் அந்தப் பிரபல நடிகர். ஒரு காலத்தில் ஜிம் போவதற்கு 100 ரூபாய் கூட கட்ட முடியாத நிலையிலும் இருந்துள்ளார் ஆர்யா. பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்றே கூறலாம்.

இப்போதய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக திகழ்ந்து வருகிறார். ஆக்சன் காமெடி என இரண்டு விதமான படைப்புகளுக்கும் பெஸ்ட் சாய்ஸ் ஆர்யா. கஜினிகாந்தின் கஜினியாகட்டும், டெடியின் சிவாவாகட்டும் படத்தின் கதப்பாத்திரங்களோடு கச்சிதமாய் பொறுந்தி விடுகிறார் ஆர்யா.

நடிப்பு ஒரு பக்கம் என்றாலும் ஃபிட்னஸ் மற்றும் சைக்கிளிங்கில் அதே போல ஈடுபாடு கொண்டவர் நடிகர் ஆர்யா. 1980ல் கேரளாவில் பிறந்த ஆர்யாவுக்கு வந்தவரை எல்லாம் வாழவைத்த சென்னை வாழ்வளிக்க மறக்கவில்லை.

“உள்ளம் கேட்குமே” என்கிற படத்தில் இயக்குனர் ஜீவாவால் அறிமுகம் செய்யப்பட்டாலும் இயக்குனர் விஷ்னுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த “அறிந்தும் அறியாமலும்” தான் முதலில் ரிலீஸ் ஆனது.

அந்த ஆண்டிற்கான சிறந்த அறிமுக நாயகன் என்கிற பதக்கம் வெனாறார் “அறிந்தும் அறியாமலும்” படத்திற்காக. வரிசையாக நடித்த பட்டியல், ஓரம்போ, அவன் இவன் என அனைத்திலுமே கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் தேவையான கலெக்சனை அள்ளினார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் முதல்முறையாக தயாரிக்க துவங்கிய ஆர்யாவின் நிறுவனம் பல்வேறு வெற்றிகளை கண்டுள்ளது. “நான் கடவுள்””அவன் இவன்” படங்களில் பாலாவுடன் பணியாற்றிய ஆர்யாவுக்கு பாலா மானசீக குருவாகவே மாறிவிட்டார்.

ஆர்யா சென்னையில் திறந்த ரெஸ்டரண்ட் திறப்பு விழாவிற்கு வருகை தந்த இயக்குனர் பாலா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 2019-ல் உடன் நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்த ஆர்யா இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் “சார்பட்டா பரம்பரை” படத்தின் வெற்றி கொண்டாடி வருகிறார்.

ஆர்யா தற்போது டபுள் கொண்டாட்டத்தில் உள்ளார். ஒன்று சார்பட்டா மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. மற்றொன்று ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.