தமிழ் சினிமாவில் கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேகா. இவர் நடித்த முதல் படத்திலேயே ஜெனிஃபர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து புன்னகை மன்னன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, எங்க ஊரு பாட்டுக்காரன், புரியாத புதிர், குணா, காவலன் அவன் கோவலன், மேகம் கருத்திருக்கு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகை ரேகா கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்ற தொழிலதிபரை 1996ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனால் குடும்பத்தையும், குழந்தையும் கவனித்து வந்தார் ரேகா. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ரேகா பல வருடங்களுக்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக ரேகா நடித்திருந்தார்.
நடிகை ரேகா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சியில் கோமாளிகளிடத்தில் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதால் இவர் மிகவும் கோவக்காரராக இருப்பாரோ என்ற எண்ணம் ரசிகர்கள் பலருக்கும் வந்தது. அந்த எண்ணத்தை மாற்றுவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
தற்போது நடிகை ரேகாவின் மகள் அனுஷாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அனுஷா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் பார்ப்பதற்கு சின்ன வயதில் ரேகா போல் அப்படியே உள்ளார். இவருடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுஷா சினிமா துறைக்கு வந்தால் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது…