ஆதித்யா சேனலிலும் பல லைவ் ஷோக்களை தொகுத்து வழங்கிய நேபாளி பெண்ணின் 10 வருட காதல் கணவர் யாரென்று !! இதோ நீங்களே பாருங்க ..!!
ஆதித்யா சேனலில் லைவ் ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் தாப்பா. நேபாளியான இவர் அஜித் நடித்த வேதாளம், விஸ்வாசம் என சில படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போதும் ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக கலக்கிக்கொண்டிருக்கும் இவரிடம் பல பேட்டிகளில் எப்போது திருமணம் என கேட்டும், எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் இன்று(06.06.2019) காலை சென்னை அமைந்தகரையில் உள்ள ஓர் அம்மன் கோயிலில் ரகு என்பவரை உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்தார்
அவருடைய திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மஹாலில் ஏற்பாடு செய்துள்ள அவர் காதல் திருமணம் கைகூடிய சந்தோஷத்தில் திளைத்துள்ளார். இதுகுறித்து தாப்பா கூறுகையில், பத்து வருஷ காதல் எங்களுடையது.எத்தனையோ தடைகள், பிரச்னைகளை தாண்டி இன்று கரம்பிடித்திருக்கிறோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எங்க வீட்டில் பர்மிஷன் வாங்கத்தான் இத்தனை வருஷம் காத்திருந்தோம்.
இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்திருக்கு. என் கணவர் பெயர் ரகு. பிருந்தா மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர் என பல நடன இயக்குநர்களுக்கு உதவி நடன இயக்குநராக இருக்கிறார் என மகிழ்ச்சியுடன் கூறினார்.