ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஆற்காடு கிச்சிலி சம்பா… சம்பாவின் அறுவடை செய்யும் நாட்கள் மற்றும் அதன் பயன்கள் என்ன தெரியுமா??

health

சம்பா என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளாகும். இந்த அரிசி பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. இது பெரும்பாலும் தென்னிந்தியாவில் காவிரி டெல்டா பகுதியில் பயிர் செய்யப்படுகிறது. இது ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இதன் சாகுபடியாகும்.

ஆற்காடு கிச்சிலி சம்பா:

ஆற்காடு கிச்சடி சம்பா அரிசியில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இது 135 நாள் சாகுபடியாகும். இதில் அதிக சுவையும், சத்துக்களும் நிறைந்துள்ளன.

சிங்கார் (சின்னார்):

நாம் வழக்கமாக பச்சை நிறத்தில் நெற் பயிர்களைப் பார்த்து நம் கண்களுக்கு ஊதா நிறத்தில் விளையும் நெற்பயிர்கள் வித்தியாசமாகத் தான் இருக்கும். இது 135 நாள் சாகுபடியாகும் இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன.

கிச்சிலி சம்பா:

கிச்சிலி சம்பா அரிசி சன்ன ரகமாகவும் சாபபிடுவதற்கு மிக சுவையாகவும் உள்ளது. பெரும்பாலான மக்கள் இதை விரும்பி சாப்பிடுகிற ரகமாகவும் கிச்சலி சம்பா உள்ளது. மேலும் இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து உள்ளது. சாப்பாட்டுக்கு சிறந்த அரிசியாக உள்ளது.

கள்ளி மடையான்:

இது உவர் மண்ணுக்கும், களர் மண்ணுக்கும் ஏத்த ரகம். இது 165 நாள் சாகுபடியாகும் இது உடல் வலிமைக்கு மிகவும் நல்லது.

தங்க சம்பா: 

இதில் அதிக மருத்துவ குங்க்ள நிறைந்துள்ளன. இது 150 நாள் சாகுபடியாகும். தினமும் இதை பயன்படுத்துவதால் உடலில் உள்ள தசைகள் மற்றும் எலும்பு வலுப்பெற உதவும்.