எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று பெண் பிள்ளைகள் ஒரு பையன் நான் தான் எங்கள் வீட்டில் மூத்த பொண்ணு எனக்கு அடுத்ததாக இரண்டு தங்கைகள் உள்ளன. கடைசியாக தான் என் தம்பி பிறந்தான். என்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் என் கல்யாண் பேச்சை ஆரம்பித்தனர்.
அப்போது நான் கேட்டேன் ஏன்மா இப்போவே எனக்கு கல்யாணம் பண்றிங்க கேட்டேன் உடனே எங்க அப்பா சொன்னார் உனக்கு பிறகு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவங்கள சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடுக்க வேண்டாமா என்று சொன்னார்.
எங்க ரெண்டு பேருக்கும் வயதாகிட்டே போகுது. உன் தம்பி சின்ன பையன் அவனுக்கும் விவரம் தெரியாது. அதனால் உனக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்தா தான் அடுத்தடுத்து அவங்கள கரை சேர்க்கணும் என்று கூறினார்..