இந்தப் புகைப்படத்தில் விக்ரமுடன், இருக்கும் இந்த சின்ன குழந்தை யாரென்று தெரியுமா? தற்போது இவர் பிரபல நடிகர்!! வைரல் புகைப்படம் உள்ளே !!!

சினிமா

சினிமாவை பொறுத்த வரை எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா இப்படி எத்தனையோ நடிகர்கள் சினிமா பின்னணி குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் முன்னேற முடியும். பிரபல நடிகரின் மகனாக இருந்தாலும் நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க பல ஆண்டுகள் ஆனது என்பது பலரும் அறிந்த ஒன்று

அந்த வகையில் விக்ரமுடன் இருக்கும் இந்த சிறுவனும் வாரிசு நடிகர் தான். விக்ரமை போல இவரும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கழித்து தான் ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் வேறு யாரும் இல்லை மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தான். நடிகர் ஜெயராம் மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார்

ஜெயராம் போலவே அவரது மகன் காளிதாசும், ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் தான் அறிமுகமானார். ஆனால், மலையாளத்தில் இவருக்கு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதே போல தமிழில் 2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண் பானையும் என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த படமும் சரியாக ஓடவில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான ‘பாவக்கதைகள்’ வெப் தொடரில் சத்தாரு என்ற இவரது இவருக்கு பெரும் பெயரை ஏற்படுத்தி கொடுத்தது

தற்போது இவர் ரெட் ஜெயிண்ட் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு கருப்பன் பட நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்க இருக்கிறார். முதலில் இந்த வாய்ப்பு குக்கு வித் கோமாளி அஸ்வினுக்கு தான் சென்றது ஆனால், வெப் தொடரில் நான் நடிக்க மாட்டேன் அஸ்வின் நிராகரித்துவிட்டார்.