இந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் நொடியான வாழ்க்கை தான்! மருந்து மாத்திரை எம்மை விட்டு விலகாது..

Tamil News

நாம் மூன்று வேலை சாப்பிடக்கூடிய சாப்பாடு தான் நம்முடைய உடலுக்கு மருந்து. சத்து நிறைந்த உணவு வகைகளை சீரான முறையில் சரியான நேரத்தில் எடுத்து வந்தால் ஆரோக்கியம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பே கிடையாது.

இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியம் இல்லாத உணவு, நேரம் தவறிய உணவு, நம் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகிறது. குறிப்பாக அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பசித்த பின் புசித்தனர். இன்று அப்படி கிடையாது.

எந்த நேரத்தில் எந்த தின்பண்டம் கிடைத்தாலும் அதை சாப்பிடுகின்றோம். நல்ல பசித்த பின்பு சாப்பிட்டுப் பாருங்கள். ஒரு வாய் சாதம் அமிர்தமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சரி சாஸ்திர ரீதியாக எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் உணவு சரியான முறையில் ஜீரணமாகி நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும், எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடும் முறையும் மிக முக்கியம்.

கிழக்கு திசை

அந்த வகையில், எல்லா விதத்திலும் நன்மை தரக்கூடிய திசை என்றால் அது கிழக்கு. கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது.

ஜீரண சக்தி சீராக இருக்கும். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து சூரிய பகவானுக்கு ஒரு நன்றியை தெரிவித்து விட்டு நீங்கள் சாப்பிட தொடங்கலாம். சாப்பிடும் போது கட்டாயமாக பக்கத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த திசை என்று பார்த்தால் தெற்கு. தெற்கு பெரும்பாலும் முன்னோர்களுக்கு உரிய திசையாக சொல்லப்பட்டுள்ளது.இருப்பினும் தெற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதும் நன்மை தரக்கூடிய விஷயம்தான். பிரச்சனை இல்லை.

ஆனால் ஒருபோதும் மேற்கு திசை பார்த்தவாறு அமர்ந்து சாப்பிடக்கூடாது.மேற்கு திசை என்பது மற்ற விஷயங்களுக்கு எல்லாம் நன்மை தரக்கூடிய திசையாக இருந்தாலும், உணவு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு மேற்கு திசை சரியான திசை அல்ல என்று சொல்லப்பட்டுள்ளது.

தவிர்க்க வேண்டிய திசை

கூடுமானவரை மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக சொந்த பந்தங்கள் வீடுகளுக்கு செல்லும் போது மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் பகை உண்டாகும் என்ற ஒரு கருத்தும் உண்டு.

அடுத்தபடியாக வடக்கு திசை. வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடும் போது சரியான முறையில் நமக்கு ஜீரணம் ஆகாது. வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறுகள் ஏற்படும்.

ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் உண்டாகும். ஆகவே வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சாப்பிட தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டியவை

சாப்பிட தொடங்குவதற்கு முன்பு நமக்கு சாப்பாடு கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி, சாப்பாடு விளையும் இந்த பூமாதேவிக்கு ஒரு நன்றியை தெரிவித்து, அதன் பின்பு நம்மை பசியாற்றும் அன்னபூரணிக்கு ஒரு நன்றியை தெரிவித்து விட்டு, வணங்கி அந்த சாப்பாட்டை உண்டு வரும்போது நமக்கு வறுமை என்ற நிலை வராது.

அதேபோல தினமும் நீங்கள் சாப்பிடக்கூடிய சாப்பாட்டில் இருந்து ஒரு கைப்பிடி சாதத்தை ஏதாவது வாயில்லா ஜீவன்களுக்கு கொடுக்கும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். காகத்திற்கு கொடுக்கலாம்.

அப்படி இல்லை என்றால் வீதியில் பசியோடு இருக்கும் நாய்களுக்கு கொடுக்கலாம். உங்கள் வீட்டுக்கு வரும் பறவைகளுக்கும் அந்த சாதத்தை வைக்கலாம். இது நம்முடைய சந்ததியினருக்கே நன்மை தரக்கூடிய விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.

 

Copyright ibctamil