இந்த தேதியில் நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணமா ..?? எங்கு திருமணம் என்று தெரியுமா..? இதோ வெளியான செய்தியை நீங்களே பாருங்க ..!!

சினிமா

இந்த தேதியில் நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணமா ..?? எங்கு திருமணம் என்று தெரியுமா..? இதோ வெளியான செய்தியை நீங்களே பாருங்க ..!!

நயன்தாரா ஒரு இந்திய நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் தோன்றுகிறார். ஃபோர்ப்ஸ் இந்தியா “பிரபலங்கள் 100”, 2018 பட்டியலில் இடம்பிடித்த ஒரே தென்னிந்திய பெண் நடிகர் இவர் ஆவார்.2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம்

திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.

விக்னேஷ் சிவன், சில சமயங்களில் விக்னேஷ் சிவன் என்று அழைக்கப்படுகிறார், இவர் தமிழ் சினிமாவில் பணிபுரியும் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். விக்னேஷ் சிவன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், நடிகர், மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றிவருகிறார். சிலம்பரசன், தனுஷ், அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அதிகமாக பணியாற்றி வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் சில தோல்விகளை சந்தித்த இவர் தற்போது விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகின்றார்.கடந்தாண்டு உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமண ஏற்படுகளை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.