தொலைக்காட்சியை பொறுத்தவரை வெள்ளிதிரையை காட்டிலும் பிரபலமாக இருப்பது சின்னத்திரை தொடர்கள் தான். சொல்லப் போனால் வெள்ளித்திரை நடிகைகள் கூட சின்னத்திரையில் நடிப்பதற்கு ஆசைப்பட்டு தொடர்களில் நடித்து வருகின்றன. அதுமட்டுமின்றி அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை தொடர்கள் என்றாலே அதில் முதன்மையாக இருப்பது பிரபல தொலைக்காட்சியான சன் டிவி தான். இதில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தான்.
அந்த வகையில் 90-களில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தது இந்த தொடர் கிட்டத்தட்ட பல நூறு எபிசோடுகளுக்கு மேல் ஓடி சாதனையை ப டைத்தது. இந்த தொடரின் ஆரம்பத்தில் வரும் பாடல் மக்கள் மத்தியில் பிரபலம். அந்த வகையில் அம்மி அம்மி மிதித்து இந்த பாடலில் நடன மாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாந்தி. இவர் சிறுவயது முதல் நடன கலைஞராக இருக்கும் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது இந்த தொடரின் பாடல்.
மேலும் இந்த தொடருக்கு பின் எந்த தொடரிலும் இவர் நடனமாடவில்லை. தற்போது வெளியாகி வரும் சித்தி 2 தொடரில் நடனமாட போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் தனது வாழ்க்கையில் நடந்த பல மோ சமா ன அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் நான் 13 வயது இருக்கும் முதலே திரையுலகில் நடனமாட வந்து விட்டேன்.
முதன் முதலாக கிழக்கு வாசல் திரைப்படத்தில் குருப்பில் ஒருவராக இணைந்து ஆடினேன். அதை தொடர்ந்து பல படங்களில் பின்னணி நடன கலைஞராக இருந்துள்ளேன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 3000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். இவ்வாறு இருக்கையில் படங்களில் நடன மாஸ்டர் ஆகும் நிலை கூட வந்தது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் பாடல்களில் நடனமாடியுள்ளேன்.
என்னதான் பல படங்களில் நடனமாடி இருந்தாலும் எனக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தியது மெட்டி ஒலி தொடர் தான். முதலில் அந்த பாடலுக்கு என்னை ஆட அழைத்த போது தொடரில் போய் ஆடுவதா என யோசித்தேன் ஆனால் அது தான் தற்போது அடையாளமாக உள்ளது. இப்படி இருக்கையில் தெலுங்கு சினிமாவில் நான் ஒரு மோ சமான அனுபவத்தை எதிர்கொண்டேன். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவரிடம் வாய்ப்புக்காக அவரை சந்தித்தேன்.
அப்போது எனக்கு மிகப்பெரிய அ வமா னம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி இனி எங்கேயும் வாய்ப்புக்காக போய் நிற்க கூடாது என்று அந்த நடிகரால் தான் முடிவு எடுத்தேன். அதன் பின் நான் யாரையும் வாய்ப்புக்காக சென்று பார்ப்பதில்லை. அதற்கு பின் எனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் தானாக அமைந்தது. ஒரு பெண் சினிமாவில் சாதிக்க வேண்டுமென்றால் பல இ ன்ன ல்க ளையும் பல விசயங்களையும் இ ழக்க வேண்டியுள்ளது. இருப்பினும் அதையெல்லாம் கடந்து தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
மேலும் இப்படி இருக்கையில் தற்போது முன்னணி நடிகர் அரவிந்த்சாமி பெயரிடபடாத படத்தில் வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்நிலையில் பல வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிகையாகவும் நடன கலைஞராகவும் வலம் வந்த வண்ணம்உள்ளது. நான் சினிமாவில் எதிர் பார்த்த அளவிற்கு வரவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் எனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.