இந்த பிரபல நடிகரை உருகி உருகி காதலித்த நடிகை நதியா!! கடைசி வரை காதல் கைகூட வில்லையாம்… யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சினிமாவில் பட வாய்ப்புகள் நடிகர்களுக்கு இருப்பது போல் நடிகைகளுக்கு அவ்வளவாக கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி ஒரு சில நடிகைகள் மட்டுமே மக்கள் மனதில் நல்ல இடத்தை பெறுகின்றனர். அந்த வகையில் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நதியா.

இவர் தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ்-களில் கனவு கன்னியாக வளம் வந்த இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து விலகியுள்ளார். பல வருடம் கழித்து மீண்டும் எம்.குமரன் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் இந்நிலையில் நடிகை நதியா மற்றும் நடிகர் சுரேஷ் இருவரும் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளனர். படங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் தகவல் வெளியானது.

இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சுரேஷ் நானும் நடிகை நதியாவும் நல்ல நண்பர்கள் தான். கடைசி வரை நண்பர்களாகவே இருப்போம் என்று கூறியுள்ளார்..