இந்த வருடம் மூவராக தல தீபாவளி கொண்டாடிய ஷபானா – ஆர்யன்!! மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ…!!

சினிமா

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷபானா. இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். மேலும் இவர் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆர்யனை கா தலி த்து திருமணம் செய்துகொண்டார்.

அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். என்பதன் காரணமாக இவர்கள் இருவரின்  வீட்டிலும் இவர்களது காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை. அதன் பின் ஆர்யன் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் ஷபானா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதன் காரணமாக இவர்கள் இருவரும் மிகவும் எளிமையான முறையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. மேலும் இந்நிலையில் இந்த வருடம் இந்த ஜோடி தனியாகவே தல தீபாவளியை கொண்டாடுவார்கள் என்று பலரும் கூறி வந்துள்ளார்கள்.

நடிகை ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். யாரு சொன்னாங்க.. நாங்க தனியா தல தீபாவளி கொண்டாட போகிறோம் என்று எங்களுடன் எப்போதும் இருப்பதற்கு நன்றி அப்பா எம் எஸ் பாஸ்கர்  என்று பதிவு செய்துள்ளார்.

ஆம் நடிகர் எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து நடிகை ஷபானா – ஆர்யன் தங்களது தல தீபாவளியை மூவராக கொண்டாடியுள்ளார்கள். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வை ரலா கி வருகிறது..