இயக்குனரை நம்பி மோசம் போன இளம் நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா?? பத்து காசுக்கு பிரயோஜனமில்லையாம்..!!

சினிமா

திரையுலகை பொறுத்தவரை சினிமாவில் முதல் படத்திலேயே பெரிய இடத்திற்கு செல்வது அரிதான விஷயம். ஆனால் அந்த இளம் நடிகைக்கு மட்டும் அசால்டாக நடந்தது. நடித்த முதல் படத்திலேயே உச்ச நடிகருடன் நடித்து கொண்டாடப்பட்டார்.

மேலும் பிறகு தமிழ் சினிமாவின் எதிர் காலம் இவர் தான் என பிரபல இயக்குனர் ஒருவர் ஏற்றி விட இவரும் அந்த இயக்குனரை நம்பி தனக்கு மீண்டும் பட வாய்ப்பு தருவார் என பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறாராம். காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்ற பாட்டை போட்டு கேட்காத குறை தானாம்.

அந்த அளவுக்கு அந்த இயக்குனரை நம்பி மோசம் போய் விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறாராம். அந்த இயக்குனருக்காக நான் எல்லாம் செஞ்சேன். அவர் இப்படி பண்ணுவாருன்னு நினைச்சுக் கூட பாக்கல என அப்செட்டாம் இளம் நடிகை. இயக்குனரிடம் சண்டை போட்டால் வருங் காலத்தில் வரும் வாய்ப்பு போய் விடுமே என மௌனமாக இருந்து விட்டாராம்.

அந்த நடிகை தற்போது இவரை நம்பினால் வேலைக்கு ஆகாது என மற்ற இயக்குனர்களிடம் பட வாய்ப்பு கேட்டு அடிபோட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆனால் நீங்க பெரிய ஹீரோயின் என சொல்லியே இவரை ஓரம் கட்டுகிறார்களாம். புதுமுக நடிகராக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்கள் நடிக்கிறேன்.

என்று கேட்டால் நீங்க பெரிய நடிகருக்கு ஜோடி போட்டு எப்படி சின்ன நடிகரோட நடிக்க முடியும் என சங்கடப்படுத்தி விடுகிறார்களாம். பாவம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் அந்த நடிகை.