இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு தங்கை இருக்காங்களா.? அடேங்கப்பா இவங்களும் ஒரு பிரபலமா.? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!!
விக்னேஷ் சிவன் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகன் கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றிவருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சிலம்பரசன், தனுஷ், அனிருத் ஆகியவருடன் இணைந்து ஆல்பம் பாடல்களில் பணியாற்றியுள்ளார்.
விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் படத்தில் நடித்தும் உள்ளார் 2007ஆம் ஆண்டு வெளியாகிய சிவி என்னும் திகில் திரைப்படத்தில் பெயரில்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்குனர் மற்றும் நடிகராக மட்டுமல்லாமல் பாடலை எழுதுவதிலும் வல்லவர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து வருகிறார் இவர்கள் இருவரும் நேரம் கிடைக்கும் பொழுது வெக்கேஷன் என்ற பெயரில் வெளிநாடுகளுக்குச் சென்று அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்தார்கள்.
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்காங்களா என்று வியந்து போன ரசிகர்கள்.