இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த சீரியல் நிஷா கணேஷ்!! என்ன குழந்தை தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்…!!

சினிமா

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் வில்லியாக நடித்தவர் தான் நடிகை நிஷா கணேஷ். அதுமட்டுமின்றி இவர் சில சீரியல்களில் நடித்த இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணேஷ் வெங்கட்ராமன் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து சமீபத்தில் மீண்டும் கர்ப்பமானார். இந்த நிலையில் இன்று காலை நிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தாய், சேய் இருவரும் நலமாக இருப்பதாக கணேஷ் தெரிவித்து இருக்கிறார். ரசிகர்கள் மற்றும் பிரலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.