அன்றாடம் பிரபலங்களை தொலைக்காட்சியில் பார்த்த தங்களது வீட்டில் ஒருவராகவே மக்கள் நினைத்து விடுகிறார்கள். புத்தம் புதிய சீரியல்கள் நிறைய வருகிறது, வெற்றிகரமாக ஓடும் தொடர்கள் முடிவடைவதும் வழக்கமாக நடந்து வருகிறது.
ஆனால் சிறந்த கலைஞர்களுக்கு என்றுமே ஓய்வு இல்லை, அடுத்தடுத்து தொடர்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி அடுத்தடுத்து சீரியல்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
அழகிய பதிவு இப்போது விஜய் டிவியின் பொன்னி, மோதலும் காதலும் போன்ற தொடர்களில் நடித்து வரும் இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாராம். தனது கணவர், மகளுடன் அழகிய போட்டோ ஷுட் நடத்தி இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்..